18 9
இலங்கைசெய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட பிரபலங்களுக்கு நேர்ந்த கதி

Share

சிறையில் அடைக்கப்பட்ட பிரபலங்களுக்கு நேர்ந்த கதி

சிறையில் அடைக்கப்பட்ட பிரபலங்களுக்கு இம்முறை வழக்கத்தை விட உயர் சலுகைகளை பெற முடியாமல் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறை அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு மரியாதை கிடைக்காததால் கைதிகள் கேலி செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வதே, ஒருமுறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை தாக்கி முழங்காலில் நிறுத்திய விதத்தை ஒருமுறை நினைவுபடுத்தியதுடன் அவரையும் அதே முறையில் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அர்ஜுன் அலோசியஸ் கடந்த வழக்குகளை போன்று சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து உணவு கொண்டுவர முயற்சித்ததாகவும், ஆனால் அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் தற்போது சிறைச்சாலையில் தச்சன் வேலை செய்யும் பிரிவில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
ns hjnkbh nfbohnkgshniohb noibf
செய்திகள்அரசியல்இலங்கை

சுதந்திர தினத்தைப் புறக்கணிப்போம்: பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்குச் சிறிதரன் எம்.பி பகிரங்க ஆதரவு!

இலங்கையின் 78-வது சுதந்திர தினமான நாளை (பெப்ரவரி 4), தமிழ் மக்கள் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட...

1531458896 indian sri lankan 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கட்டுநாயக்கவில் 24 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்: அக்குரணை தொழிலதிபர் கைது!

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த தொழிலதிபர் ஒருவர், சட்டவிரோதமான முறையில்...

1770043539 Biosystems Technology AL Exam Sri Lanka 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தர உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் செயன்முறைப் பரீட்சை பெப். 07 ஆரம்பம்: பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் (Biosystems Technology)...

OMugyjDW
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் ராஜபக்ச குடும்பத்தினர்: ஷிரந்தி மற்றும் நாமல் இன்று முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர்...