வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பல் ஒன்று, குறித்த வீட்டின் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
இந்த சம்பவம் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ரதீஸ்குமார் (வயது 41) என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு குறித்த வீட்டினுள் நுழைந்த கும்பல் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதேவேளை, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் போன்றவற்றையும் அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளது.
மேலும், வீட்டில் இருந்த கையடக்க தொலைபேசிகளை கொள்ளையடித்து சென்றுள்ளதுடன், பெண்களையும் வளைக்கட்டி அச்சுறுத்தி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment