அத்துமீறிய இந்திய மீனவர்கள் துரத்தியடிப்பு!

1667784466 sri lankan boat 2

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நேற்று (24) மாலை இலங்கை கடற்படையினரால் துரத்தப்பட்டனர்.

இவ்வாறு துரத்திய சமயம் கடற்படையினர் அவற்றை வீடியோ வடிவில் ஒளிப்பதிவு செய்ததோடு இந்திய படகுகளின் இலக்கங்களையும் குறித்துள்ளனர்.

இதன்போது படகுகள் நின்ற இடங்களை ஜீ.பி.எஸ் கருவிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version