விமல், வாசு, கம்மன்பில மூவரும் நாடகம் நடத்துகின்றனர்: நளிந்த கடும் தாக்கு!

Nalintha Jayatissa

அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகிய மூவரும் நாடகம் அரங்கேற்றிவருகின்றனர்.” – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” யுகதனவி ஒப்பந்தத்துக்கு அமைச்சர்கள் மூவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்மையாலுமே அரசிலிருந்து வெளியேறிதான் அவர்கள் அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு வெளியேறமாட்டார்கள்.

அதேபோல ஜனாதிபதியும் அவர்களை நீக்கமாட்டார். இவர்கள் எல்லாம் இணைந்து மக்களை ஏமாற்ற நாடகம் அரங்கேற்றிவருகின்றனர்.” – என்றார்.

அதேவேளை, அரசிலிருந்து வெளியேறும் எண்ணம் தம்மிடம் இல்லை என மேற்படி மூன்று அமைச்சர்களும் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version