IMG 20230512 WA0001
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Share
அரசின் கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்ட்ட  கைதுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பூசகரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்  நேற்று மாலை 2:30 மணியளவில் வவுனியா நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்து.
இதன் பொழுது திட்டமிட்ட கைதுகளை உடனடியாக நிறுத்து ,வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்,வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, தொல்லியல் திணைக்களமே அரசின் கைக்கூலியா,கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும், திருகோணமலை எங்கள் சொத்து ,அம்பாறை எங்கள் சொத்து , மட்டக்களப்பு எங்கள் சொத்து, யாழ்ப்பாணம் எங்கள் சொத்து, கிளிநொச்சி எங்கள் சொத்து, வவுனியா எங்கள் சொத்து, முல்லைத்தீவு எங்கள் சொத்து, மன்னார் எங்கள் சொத்து,வீரம் விளைந்த தேசம் காக்கிகளின் சலசலப்புக்கு அஞ்சாது, இராணுவமே வெளியேறு,மண்துறந்த புத்தருக்கா மண்மீது ஆசையா என்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட  வவுனியா மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...