விகாரையை  சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கவனயீர்ப்பு போராட்டம்!

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை  சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
IMG 20230503 WA0171
#srilankaNews
Exit mobile version