24 666d310f502ee
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர் உட்பட ஐவருக்கு பொலிஸார் வலை வீச்சு

Share

வெளிநாட்டவர் உட்பட ஐவருக்கு பொலிஸார் வலை வீச்சு

மாதுரு ஓயா தேசிய பூங்காவிற்குள் மயில் ஒன்றை அறுத்து அதன் இறைச்சியை வறுத்து அதனை உட்கொண்ட வெளிநாட்டவர் ஒருவர் உட்பட வேடுவ சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு அல்லது 2020ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சிகளால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த காணொளியை 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அடுத்தே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வனவிலங்கு காப்பாளர் – ஹெனானிகல டபிள்யூ.எம்.குமாரசிறி விஜேகோன், மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட மயிலை வேட்டையாடுவதில் சமூகத்தின் பாரம்பரிய வேட்டைக் கருவிகளான வில் மற்றும் அம்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காணொளியின்படி பழங்குடி சமூகத்தின் பாரம்பரிய முறைப்படி மயிலை வறுத்து, தேனில் குழைத்து உட்கொள்வது காட்டப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...