இந்திய துணை தூதர் – கடற்தொழில் அமைப்புக்கள் சந்திப்பு

IMG 20220927 WA0018

வடக்கு மாகாண கடற்தொழில் இணையமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

தற்போதைய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறும் விதமாக குறித்த கருத்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது.

இந்திய இழுவை மடித் தொழிலினால் வடக்கு பகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக இந்திய முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்று தருமாறு கேட்டுக்கொண்டதாக கடல் தொழில் இணையத்தின் இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்தார். இதற்கு இந்திய துணை தூதர் அனுமதி பெற்று தருவதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version