download 1 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது!

Share

மீரிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொது சந்தைத்தொகுதியொன்றுக்குள் நேற்று (10) அதிகாலை இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீரிகம பகுதியிலுள்ள பொதுச் சந்தை கட்டிடத்தொகுதிக்குள் வியாபார நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருந்த இருவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு அனுமதிக்க முன்னரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 55 வயதுடைய முகுருகம்பல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...