அரசாங்கம் வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தாலும் தற்போது அதிகரித்து காணப்படும் விலை குறையாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அரசாங்கம் வாகன இறக்குமதியை தற்போது நிறுத்தியுள்ளமையால் கார் விற்பனையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் போது விலை ஏறும் என்ற கோட்பாடு ஏற்கனவே வாகனங்களை பாதித்துள்ளது. ரூபா மதிப்பு குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு என்பன வாகனங்களின் விலை கடுமையாக அதிகரித்தமைக்கான காரணமாகும். ஆனால் இதிலிருந்து வெளிவர நீண்ட காலம் பிடிக்கும் எடுக்கும்.
அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாகனங்களின் இறக்குமதியை நிறுத்தியதிலிருந்து, கார் விற்பனையாளர்கள் வங்கிக் கடன்கள் மற்றும் பிற செலவுகளை வணிகங்களுக்கான மூலதன நிதியில் ஈடுசெய்கின்றனர். இதனால் இத்துறையில் தொழில் புரிந்த பலர் வேலைகளை இழந்துள்ளனர்.
எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பயன்படுத்திய ஜப்பானிய வாகனங்கள் அனைத்தும் இப்போது இருப்பது போல் ஒவ்வொன்றாக உயர்ந்து இந்திய வாகனங்கள் சில இலட்சங்கள் உயர்ந்துள்ளன.
#SriLankaNews
Leave a comment