24 662f35b823a11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல்

Share

இலங்கையில் வாகன விலை அதிகரிப்பு தொடர்பில் தகவல்

நாட்டுக்குப் பொருத்தமற்ற வாகனங்களைக் கொள்வனவு செய்தமையே வாகன இறக்குமதிக்கானத் தடைக்கு காரணமாகும் என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

பாவனை செய்யப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றின் திருத்தப் பணிகளுக்காக அதிகம் செலவழிப்பதாலேயே வாகனங்களின் விலை அதிகரிக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை போன்ற நாடுகளுக்கு குறைந்த விலையில் சிறந்த வாகனங்களைக் கொள்வனவு செய்யலாம். அவ்வாறு இடம்பெறாமையே இங்கு பிரச்சினையாகியுள்ளது.

2018, 2019 ஆகிய ஆண்டுகளில் நாட்டுக்கு, பாவனை செய்யப்பட்ட வாகனங்களே பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டன. அவற்றிலும் ஜப்பானிலிருந்தே அதிகளவான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

அதேநேரம் ஜப்பான் வாகனங்களே தரத்தில் சிறந்தவை. குறைந்த விலைகளோடு தரமான வாகனங்களை இறக்குமதி செய்யலாம். இவ்வாறான பின்னணியில் சில வாகன இறக்குமதியாளர்கள் வாகனங்களின் திருத்தப் பணிகளுக்காக அதிக பணத்தைச் செலவிடுவதாகத் தெரிவிக்கின்றனர்.

ஆகையால் வாகனத்தின் விலை அதிகரிப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், உரிய முறையில் குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

எனினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முறையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தவறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...