வவுனியாவில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

வவுனியாவில் இளம் குடும்பப் பெண்ணொருவர் கிணற்றிலிருந்து இன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

30 வயதுடைய இந்துஜா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த இவர் லண்டனில் இருந்து 7 மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்து வசித்தார் எனவும், கணவரும் இரண்டு பிள்ளைகளும் லண்டனில் வசிக்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

உறவினர்கள் இவரைக் காணவில்லை எனத் தேடியபோதே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1

#SriLankaNews

Exit mobile version