tamilni 333 scaled
இலங்கைசெய்திகள்

வவுனியா இரட்டைக் கொலை! சிறையிலிருந்து பெண்ணொருவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ள சந்தேகநபர்

Share

வவுனியா இரட்டைக் கொலை! சிறையிலிருந்து பெண்ணொருவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ள சந்தேகநபர்

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரிடம் இருந்து தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ்வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், வீட்டிற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர்.

ஆறு பேர் கைது
குறித்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பிரதான சந்தேகநபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேகநபர் தொலைபேசி பயன்படுத்தியுள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு இந்த சம்பவத்தை கொண்டு வந்ததையடுத்து இன்று (24.08.2023) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேகநபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிறையில் வைத்து பயன்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி
குறித்த தொலைபேசியின் ஊடாக 3292 வெளிச் செல்லும் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலம் படி 35 தடவைகள் அழைப்பு மேற்கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...