IMG 20220806 WA0011
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வட்டுக்கோட்டை திருட்டு! – இளைஞன் கைது

Share

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.பி.டி .கொஸ்தாவின் வழிகாட்டலில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி என் எஸ்.டி.சத்திரசிங்கவின் தலைமையில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து மேற்க்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய நேற்று மாலை வட்டுக்கோட்டை பொலிசார் வட்டு தெற்கு இன்பச்சோலை பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் வட்டுக்கோட்டை பொலிசார் 8 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் 8 மின் மோட்டார் இயந்திரங்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாகவும் மேலும் திருட்டுக்களில் சந்தேக நபர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...