இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வல்லிபுர ஆழ்வார் வருடாந்த பெருந் திருவிழா

IMG 20220924 WA0012
Share

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா இன்றைய தினம்(24) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிரிஜைகள், வசந்த மண்டப பூஜை என்பன இடம்பெற்று 8.45 மணிக்கு கொடியேற்றம் மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன் கருட வாகனத்தில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார் ஆலய உள்வீதியில் வலம்வந்தார்.

ஒக்டோபர் 1ம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும் ஒக்டோபர் 2ம் திகதி வெண்ணைத் திருவிழாவும்
ஒக்டோபர் 3ம் திகதி துகில் திருவிழாவும் ஒக்டோபர் 4ம் திகதி பாம்புத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

கம்சன் போர்த்திருவிழா ஒக்டோபர் 5ம் திகதியும் வேட்டைத்திருவிழா ஒக்டோபர் 6ம் திகதியும் சப்பறத் திருவிழா ஒக்டோபர் 7ம் திகதியும் தேர்த்திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதியும் இடம்பெறவுள்ளது.

கேணித் தீர்த்தத் திருவிழா ஒக்டோபர் 8ம் திகதி காலையும் அன்றைய தினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று பெருந்திருவிழா நிறைவுபெறும்.

IMG 20220924 WA0022 IMG 20220924 WA0015 1 IMG 20220924 WA0020 IMG 20220924 WA0021 IMG 20220924 WA0016

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...