24 660d15001fc6f
இலங்கைசெய்திகள்

பொலிஸ் சேவையில் இணைய சந்தர்ப்பம்: தமிழ் மொழியில் வெற்றிடங்கள்

Share

பொலிஸ் சேவையில் இணைய சந்தர்ப்பம்: தமிழ் மொழியில் வெற்றிடங்கள்

இலங்கை பொலிஸ் சேவையில் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் மலையக பகுதியில் தமிழ் மொழியில் சேவையாற்றுவதற்கு அதிக வெற்றிடம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அதற்கான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மலையகத்தை பொறுத்தமட்டில் பல இளைஞர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாக காணப்படுகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மலையக பொலிஸ் நிலையங்களிலேயே அதிக அளவில் வெற்றிடங்கள் காணப்படுகின்றது.

எனவே, தாமதிக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதோடு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மலையக பொலிஸ் நிலையங்களிலேயே நியமனம் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...