இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி பேருந்து சேவை சங்கத்தின் போராட்டம் நிறைவு!

Share
IMG 20220624 WA0060
Share

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் போராட்டம் வட பிராந்திய முகாமையாளர் உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் இலங்கை போக்குவரத்து சாலைகளில் டீசல் நிரப்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கண்டித்து இன்றைய தினம் தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ.சிறி, பருத்தித்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் வடபிராந்திய பிராந்திய சாலை முகாமையாளரை அழைத்து அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் 750 வழித்தடத்தில் நாளாந்தம் சேவையில் ஈடுபடும் 25 போக்குவரத்து வாகனங்களுக்கும், நாளாந்தம் 750 லீட்டர் டீசல் வழங்குவதாக உறுதி மொழி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது தனியார் 750 வழித்தட சேவை போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...