தற்போது நாட்டில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் திறக்கப்படவில்லை.
இதனால் பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க 12–18 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சூம் ஊடாக மேற்கொண்ட கலந்துரையாடலேயே சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நிறைவடைந்துவிட்டால் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படும்.
இதேவேளை 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் முதலாவது தடுப்பூசியை 34 சதவீதமானோரும் இரண்டாவது தடுப்பூசியை 12 சதவீதமானோரும் இதுவரையிலும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment