உணவகங்களில் தடுப்பூசி அட்டைகளை காட்டி உணவருந்தும் நடைமுறை வரலாம்.
இவ்வாறு கொழும்பு நகர உணவகக் குழுமத்தின் தலைவர் ஹர்போ குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள உணவக உரிமையாளர்கள் பலரிடமும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் கொழும்பில் உணவகங்களுக்கு வருகை தருவோர் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டமைக்கான அட்டையை வைத்திருத்தல் வேண்டும். அல்லது தொலைபேசியில் ஒளிப்படம் எடுத்து வைத்து அதனைக் காண்பிக்க முடியும்.
அத்துடன் உணவகத்தில் பணிபுரிபவர்களும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான அட்டையை வைத்திருத்தல் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment