முழுமையான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கான முன்மொழியப்பட்ட டிஜிட்டல் அட்டை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்த அட்டைகளை விநியோகித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட வெளிநாடு செல்லவுள்ளோருக்கு குறித்த டிஜிட்டல் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் குறியீட்டில் அடிப்படையில் டிஜிட்டல் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது .
இதன் மூலம் எந்தவொரு நபரும் போலி அட்டை தயாரிப்பதற்கான சந்தர்ப்பம் தடுக்கப்படும் வகையில் முழுமையான பாதகாப்புடன் குறித்த அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் QR குறியீடு ஊடாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் துறைசார் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment