வடக்கு மாகாணத்தில் 12– 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும்.
இதனை வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக,
விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 –19 வயதினருக்கு கடந்த 24 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
சுகாதார அமைச்சின் அடுத்த கட்டமாக, ஒக்ரோபர் 1 முதல் நாடு முழுவதும் உள்ள விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12–19 வயதினருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டு்ளளது.
அதன்படி இன்று வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தத் தடுப்பூசியானது சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைய,]
குழந்தை நல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணர் ஒருவரின் பரிந்துரைக்கு அமையவே வழங்கப்படும்.
இதற்கமைய வடக்கு மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தில்,
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment