சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற பைஸர் தடுப்பூசியை எந்தவித அச்சமும் இன்றி வைத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் பெறலாம்.
இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 12–19 வயது வரையான விசேட தேவையுடைய சிறுவர்கள் மற்றும் நாள்பட்ட நோய் உடையோர் ஆகியோருக்கு கொழும்பில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது கொழும்பு, குருநாகல் மற்றும் அனுராதபுரம் என விரிவுபடுத்தப்படுத்தப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி யாழ்ப்பாணத்துக்கும் விரைவில் பைஸர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை துரிதகதியில் சுகாதாரத் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகவே பெற்றோர் தமது சிறுவர்களுக்கு தடுப்பூசிகளை பெறும்போது குழந்தை வைத்திய நிபுணர்களின் ஆலோசனை பெற்று உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வழிசெய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a comment