இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜதந்திர குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இன்று பேச்சு நடத்தவுள்ளனர்.
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் உட்பட ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவினர், இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தனர்.
இந்நிலையில் இன்று இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவது தொடர்பிலான மாநாட்டிலும் அமெரிக்க பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment