இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் Julie Chung வுக்கும், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நிலைமையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்காவால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment