நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்து, நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் பதாகைகளைத் தாங்கியவாறு ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிரேஷ்ட உறுப்பினர்கள் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இக்குழுவில் ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது எதிர்ப்பு நடவடிக்கைககளை ஆரம்பித்துள்ளது.
#SrilankaNews