கண்ணீர் புகை தாக்குதலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சபாநாயகரை உடன் அழைத்து, இப்பிரச்சினை தீர்வை வழங்குமாறும் வலியுறுத்தினர்.
அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை உடன் விவாதத்துக்கு எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. சபைக்குள் மோதல் சம்பவமும் பதிவானது.
இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
#SrilankaNews