GANESH
அரசியல்இலங்கைசெய்திகள்

பல்கலை மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்!

Share

” ஜனநாயக வழியில் போராடிய, போராட்டக்காரர்கள்மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது பாரதூரமான விடயமாகும். எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்.” – என்று மலையக சிவில் அமைப்புகளின் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

அட்டனில் இன்று (23.08.2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மேற்படி கூட்டமைப்பின் தலைவர் கணேசலிங்கம் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. மக்கள்மீது சுமைகள் திணிக்கப்பட்டன. எனவே, நாட்டை மீட்கவும், அரசியல் மற்றும் ஜனநாயக மறுசீரமைப்புகளை கோரியுமே மக்கள் வீதிகளில் இறங்கினர். ஜனநாயக வழியில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளையாக முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு பதவி விலக வேண்டி ஏற்பட்டது.

போராட்டத்தால்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களும் அந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட வேண்டியவர்கள் சுமந்திரமாக நடமாடுகின்றனர். ஆனால் நீதிக்காக போராடியவர்கள் தண்டிக்கப்படுகின்றனர். எனவே, கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை தண்டிக்கலாம். ஆனால் ஜனநாயக வழியில் போராடியவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, மலையக சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும். பொருளாதார சிக்கலை பயன்படுத்தி, மலையக சிறார்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுமி ரமணியின் மரணத்தை சாதாரணமாக கருதிவிட முடியாது. ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...