Jaffn Uni
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பீடாதிபதிகள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, மாணவர் நலன் கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்துப் பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன், விடுதிகளில் தங்கி நிற்கும் மாணவர்களை விடுதிகளில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், பரீட்சை மற்றும் அத்தியாவசிய ஆய்வு நடவடிக்கைகளுக்காக மருத்துவ பீடத்தின் இறுதி வருட மாணவர்களுக்கு மாத்திரம் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடுதிகளில் உள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், மாணவர்களின் போக்குவரத்து ஏற்பாடுகளுக்கமைய விடுதிகளை விட்டு வெளியேறுவதற்குப் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...