3 29
இலங்கைசெய்திகள்

யாழில் போராட்டத்தில் குதித்த வேலையில்லா பட்டதாரிகள்!

Share

யாழில் போராட்டத்தில் குதித்த வேலையில்லா பட்டதாரிகள்!

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்றையதினம் (16.01.2025) காலை 9.30 மணியளவில் யாழ். (Jaffna) நகர்ப்பகுதியில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் ஆரம்பமாகியது.

அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணியும் துண்டுப்பிரசுரம் வழங்கலும் இடம்பெற்றதுடன் விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது , துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...