நிழல் உலக தாதா மாகதுரே மதுஷுக்குப் பிறகு, டுபாயிலிருந்து இலங்கையில் பாதாள குழுக்களை வழிநடத்தினார் என நம்பப்படும், ‘ஹரக் கடா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 2 மாதங்களில் நடந்த பல கொலைகள் இவரின் வழிகாட்டலுடனேயே இடம்பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் சர்வதேச பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தனது மனைவியுடன் மலேசியாவிற்கு பயணித்த போதே கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
பாதாள குழுக்களை வழிநடத்தினார் எனக் கூறப்படும் ‘ஹரக் கடா’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
#SriLankaNews
Leave a comment