தேசிய மட்டத்தில் உள்ளாடை உற்பத்தி – சதொச ஊடாக விற்பனை!!
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 623 அத்தியாவசியமற்ற பொருள்களின் உத்தரவாத தொகையை அதிகரித்தமையால் உள்ளாடை பாவனைக்கு தட்டுப்பாடு மற்றும் விலை என்பவை அதிகரிக்கப்படாது.
தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யும் உள்ளாடைகளை சதொச விற்பனை நிலையம் ஊடாக குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியை அதிகரிக்கவே இறக்குமதி செய்யும் 623 பொருள்களின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இறக்குமதி செய்ய தடைவிதிக்கவில்லை.
தற்போது சமூக வலைத்தளத்தில் உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என கீழ்த்தரமாக பதிவிட்டு வருகின்றனர்.
இவ்வாறான பதிவுகள் இலங்கையின் தேசிய மட்டத்திலான ஆடைத்தொழில் துறையை அவமதிப்பனவாக உள்ளன. அத்துடன் இலங்கை ஆடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி நிலவுகிறது. தேசிய மட்டத்தில் தைக்கப்படும் உயர்தர ஆடைகளை குறைந்த விலையில் மக்கள் பெறுகிறாகள்.
இலங்கையில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளுக்கு உலக சந்தையில் அதிக கேள்விகள் எழுகின்றன. இவ்வாறான நிலையில் உள்ளாடைக்கு பற்றாக்குறை என குறிப்பிடப்படும் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
நாட்டிலேயே பாவனைக்கு தேவையான உள்ளாடைகள் போதுமான அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என பிரதான நிலை உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
எக்காரணம் கொண்டும் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு ஏற்படாது என்பதை தெரிவிக்கின்றேன்.
அத்துடன் சதொச விற்பனை நிலையம் ஊடாக உள்ளாடைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment