images 2 1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐ.நா. கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்!

Share

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை வெளியிடப்பட்டு, இலங்கை குறித்த விவாதமும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு சில தினங்கள் முன்னதாகவே ஜெனீவாவை சென்றடைந்த இலங்கையின் அரச உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஃபெட்ரிகோ விலிகஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோரடங்கிய இலங்கைப் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் முயற்சிகள் மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அதுமாத்திரமன்றி இதன்போது உள்ளகப்பொறிமுறையை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் மீளவலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...