corona – வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொவிட் உறுதி!!
வவுனியாவில் உயிரிழந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 28 வயது இளைஞன் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் திடீர் சுகவீனமடைந்ததை அடுத்து, அவர் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆயினும் வைத்தியசாலை கொண்டுசெல்ல முன்னரே அவர் உயிரிந்துள்ளார்.
அதன்பின்னர் அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகவீனம் காரணமாக வவுனியா, புளியங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்த 55 வயது நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் புளியங்குளம் வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்ப்பபட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
இவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்குத் தொற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Leave a comment