அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் இருவேறு நிலைப்பாடுகள் நிலவுகின்றன. இதனால் இறுதி முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர், மக்களின் கோரிக்கையை ஏற்று, நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் நடுநிலை வகிப்பதே சிறந்தது, அந்த முடிவை இ.தொ.கா. மாற்றினால் அது எதிர்கால அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என மற்றுமொரு தரப்பினர் கூறிவருகின்றனர்.
இதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் உறுதியான – இறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு காங்கிரசுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி தம்முடன் பேச்சு நடத்தும்போது, தமது தரப்பு கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a comment