tamilni 217 scaled
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு வர்த்தகர்களும் அனைத்து விமான நிலைய சோதனைகளையும் கடந்து இந்த பொருட்களை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்லும் போது, ​​விமான நிலைய பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட விசேட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று அங்கு வந்து கைது செய்தனர்.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த இரு தொழிலதிபர்களும் தங்களது பைகளில் மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களை மறைத்து வைக்காமல், விமான நிலைய சரக்குகளுக்கான வண்டிகளில் வைத்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்ததாக விமான நிலைய பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...