5000 ரூபா வழங்குவதில் சிக்கலாம்!

Money

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது என்பது கடினமான ஒன்று என்று, தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன், இலங்கையில் உள்ள தனியார் துறைகளின் தலைவர்களுடன் இன்று (10) தொழில் திணைக்களத்தில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்றுமதி வருவாயும் சரிந்துள்ளது, கட்டண உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் இறக்குமதி மற்றும் செலவுகள் அதிகரிப்பு மற்றும் வங்கிகள் அறவிடும் அதிக வட்டி வீதங்கள் ஆகியவற்றை மேற்கோள்காட்டி மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Exit mobile version