திருகோணமலை துறைமுகத்தை அண்டிய கடற்பிரதேசம் முழுமையாக மீனவர்களின் படகுகளைக் கொண்டு முற்றுகையிடப்பட்டுள்ளது.
சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவ சமுதாயத்தினர் ஒன்றுதிரண்டு திருகோணமலை கடற்பிரதேசத்தில் வளையம் அமைத்து முற்றுகையிட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கடற்படைக் கப்பல் மூலம் தப்பிச்ச செல்வத்தைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்படையின் டோரா படகு ஒன்றினுள் மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் மறைந்துள்ள நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல தருணம் பார்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, திருகோணமலையை அண்டிய பிரதேசங்களில் உள்ள மீனவர்களும் தங்கள் படகுகளுடன் திருமலைத் துறைமுகத்தை நோக்கி விரைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews
Leave a comment