சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தந்தை செல்வா வளாகத்தில் (01.03.2024) பிற்பகல் 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதன் போது மரணமடைந்த சாந்தனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டதுடன், சாந்தன் குறித்த அஞ்சலி உரையும் நிகழ்த்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சாந்தனின் அஞ்சலி நிகழ்வில் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து டெலோ, தமிழரசுக் கட்சியினர் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டெலோவின் முக்கிய உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.