செய்திகள்இலங்கைபிராந்தியம்

புங்குடுதீவில் மரக் கடத்தல்! – ஒருவர் கைது

0
Share

புங்குடுதீவு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக பனைமரங்கள் மற்றும் பெறுமதியான மரங்கள் என்பவற்றை பாரவூர்தியில் கடத்திச் சென்ற சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மரக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பாரவூர்தியையும் , மரங்களையும் கையகப்படுத்தியுள்ள பொலிஸார் பாரவூர்தி சாரதியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மடத்துவெளிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது.

இன்றையதினம் ஜே – 26 கிராம சேவையாளர் மற்றும் அப்பகுதியின் பொருளாதார உத்தியோகத்தர் ஆகியோரது உறுதிப்படுத்தலில் 45 சீவிய பனைமர துண்டுகளை எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அதிகளவான மரங்களை பரவூர்தியில் எடுத்து செல்ல முற்பட்ட வரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை , பல மாதங்களாக கண்டியை சேர்ந்த நபர் ஒருவர் புங்குடுதீவை சேர்ந்த அரசியல் பின்னணியை கொண்ட இருவருடன் இணைந்து சட்டவிரோதமாக பனைமரங்கள் , உள்ளிட்ட மரங்களை வெட்டி கடத்தி வருவதாகவும் , அவர்கள் ஊர்காவற்துறை பொலிஸாருடன் நல்லுறவை பேணுவதனால் , பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை என ஊரவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் குறித்த நபர்கள் மரக்கடத்தலில் ஈடுபடுவதாக முன்னர் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் , அவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில் , பொலிஸ் உயர் அதிகாரியிடம் முறையிட்ட பின்னரே ஊர்காவற்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...