ரயில் கட்டணமும் எகிறியது!

Train 1

நாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் அச்சு பணிக்காக அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ரயில் கட்டணத்தை தற்போதைய பஸ் கட்டணத்தில் 50 சதவீதத்தை விடவும் குறைந்த கட்டணத்தில் அதிகரிக்க முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போதைய குறைந்தபட்ச கட்டணம், பத்து ரூபாவிலிருந்து இருபது ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version