இந்தியாவால் தயாரிக்கப்பட்ட 20 ரயில் பெட்டிகள் கப்பல் மூலமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
இந்திய கடன் திட்டத்தின் அடிப்படையில் 160 ரயில் பெட்டிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
இவற்றின் இறக்குமதிக்காக 82.64 டொலர் செலவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இந்தியத் தூதரகம், இதனால் போக்குவரத்து துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான ஒத்துழைப்பு தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.
160 பெட்டிகளில் ஒரு தொகுதியே தற்போது இலங்கைக்கு வந்தடைந்துள்ளது எனவும் விரைவில் மேலும் பல ரயில் பெட்டிகள் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.