தீபாவளி தினத்தில் துயரம்! – இளைஞர்கள் சடலமாக மீட்பு

பருத்தித்துறை சிங்க நகர் பகுதியில் உள்ள தோட்டக்காணி ஒன்றில் இருந்து இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (24) மீட்கப்பட்டுள்ளது.

தீபாபளி தினமான இன்று இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் அப்பகுதியே சோக மயத்தில் ஆழ்ந்துள்ளது.

பருத்தித்துறை பன்னங்கட்டுப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சுசேந்த குமார் சசிகாந், மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கணேசலிங்கம் லம்போசிகன் ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், புலனாய்வு விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னரே உண்மையான தகவலை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

FB IMG 1666633624766

#Srilankanews

Exit mobile version