திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் ஐவர் பலியாகியுள்ளதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்ணியா குருஞ்சஙகேணி பிரதேசத்தில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்றுவருவதால் அவ்விடத்தில் சேவையில் இருந்த மோட்டார் இழுவைபடகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
கிண்ணியா ஆதார வைத்தியசாலை பேச்சாளர் கொழும்பில் உள்ள செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய செய்தியில் இன்னும் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சிலரின் நிலை கவலைகிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.
தற்போது கிடைத்த தகவலை தொடர்ந்து தற்போது வரை 7 மரணங்கள் உறுதியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் தகவல்கள் தெரிய வருகிறது.
குறித்த விபத்தில் இன்னும் சிலர் பலியாகியிருக்ககூடும் என்ற சந்தேகத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை அறியமுடிகிறது.
#SriLankaNews