செல்பி எடுக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

Selfie

செல்பி எடுக்க முயன்ற இளைஞரொருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

வவுனியா மதவாச்சி மன்னார் வீதி கல்லாற்றுப்பாலத்தில் இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறுப்பாலத்தில் ஏறி தங்களது கையடக்கத் தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது மன்னார் பியர் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயிலில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனையவர் பாலத்தின் கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளார்.

சம்பவத்தில் முருங்கன் பரியாரி கண்டல் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா (வயது 19) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version