16 3
இலங்கைசெய்திகள்

மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் கொடுப்பனவு அதிகரிப்பு

Share

மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் கொடுப்பனவு அதிகரிப்பு

மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வீதிகளில் மோட்டார் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்த கொடுப்பனவு இவ்வாறு அதிகரிக்கப்பட உள்ளது.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இந்த சுற்று நிருபத்தை வெளியிட்டுள்ளார்.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மாதாந்த கொடுப்பனவு 1800 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

பரிசோதகர் தர உத்தியோகத்தர் ஒருவரின் மாதாந்தக் கொடுப்பனவு 2000 ரூபாவிலிருந்து 7000 ரூபாவாகவும், மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரின் கொடுப்பனவு 2500 ரூபாவிலிருந்து 7000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தி சிறந்த சேவையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...