போக்குவரத்து விதிமீறல் – 1,25,000 ரூபா அபராதம்!

pg4 1hhhh

மதுபோதையில் போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிபதி நளினி சுகாதாரன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

அவர் மீது 7 குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து பொலிஸார் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தனர்.

அதன்படி மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை , காப்புறுதி பத்திரமின்மை , வரிப்பத்திரமின்மை, தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தியமை, தலைக்கவசம் அணியாதவரை ஏற்றி சென்றமை மற்றும் பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்றமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்து நீதிமன்று தீர்ப்பளித்துள்ளது.

Exit mobile version