இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பேருந்தில் தவற விடப்பட்ட பணத்தினை மீட்டுக்கொடுத்த போக்குவரத்து பிரிவு பொலிஸார்!

VAN3oS0
Share

யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பேருந்தில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வங்கியில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அவர் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்கி தனது பையை பார்த்த வேளை அதனுள் இருந்த பணத்தினை காணவில்லை.

அவ்வேளை அப்பகுதியில் வீதி கடமையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து பொலிசாரிடம் அது தொடர்பில் முறையிட்டுள்ளார்.

அதனை அடுத்து அந்த மூதாட்டியின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு, முச்சக்கர வண்டியில் தம்மை பின் தொடருமாறு அறிவுறுத்தி விட்டு பொலிஸார் பேருந்தினை துரத்தி சென்று , கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு அருகில் வழிமறித்து , மூதாட்டியின் பணம் காணாமல் போனமை தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பேருந்து நடத்துனரின் உதவியுடன் , பேருந்தை சோதனையிட்டனர். பணத்தினை காணாத நிலையில் , பயணிகளை சோதனையிட போவதாக கூறி , ஒரு சில பயணிகளை பேருந்தில் இருந்து இறக்கி சோதனையிட்ட போது பேருந்தினுள் பணம் கிடப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.

இருக்கை ஒன்றின் கீழ் இருந்து பணத்தினை பொலிஸார் மீட்டனர். அதில் 7 ஆயிரம் ரூபா குறைவாக 89ஆயிரம் ரூபா பணமே காணப்பட்டது.

அதேவேளை அங்கு வந்திருந்த பணத்தினை தவறவிட்ட மூதாட்டி , இந்த பணம் கிடைத்ததே பெரிய விடயம் என கூறி பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

அதனை அடுத்து பேருந்தில் பயணித்த பயணிகளும் பொலிஸாருக்கு நன்றியையும் , பாராட்டையும் தெரிவித்த பின்னர் தமது பயணத்தினை தொடர்ந்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 4
உலகம்செய்திகள்

பிரான்ஸ் குடியுரிமை விதிகளை கடுமையாக்க உத்தரவிட்ட அமைச்சர்: சாடியுள்ள மனித உரிமைகள் அமைப்பு

பிரான்ஸ் உள்துறை அமைச்சர், குடியுரிமை விதிகளை கடுமையாக்குமாறு தனது அமைச்சக மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்....

21 5
உலகம்செய்திகள்

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி

பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம்...

24 3
உலகம்செய்திகள்

அப்பாவிகளை கொன்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை கொடுத்துள்ளோம்! இந்திய பாதுகாப்புத்துறை

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது என பாதுகாப்புத்துறை...

26 3
உலகம்செய்திகள்

3 வருடங்கள் போன் பயன்படுத்தாமல் SSC-ல் தேர்ச்சி பேற்று , பின்னர் UPSC-ல் தேர்ச்சி பெற்ற இளம் அதிகாரி யார்?

3 வருடங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாமல் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் 24 வயதில் யுபிஎஸ்சியில்...