மண்சரிவு காரணமாக நுவரெலியா கந்தப்பளை-கோனப்பிட்டிய வீதியுடனான போக்குவரத்து இன்று (05) காலை முதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இன்று (05) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக, இந்த வீதியுடனான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, வீதியில் வீழ்ந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
#SrilankaNews