இன்றைய வானிலை தொடர்பில் முன்னறிவிப்பு
இலங்கைசெய்திகள்

இன்றைய வானிலை தொடர்பில் முன்னறிவிப்பு

Share

இன்றைய வானிலை தொடர்பில் முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி இன்றைய தினம் (14.08.2023) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழைபெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடல் பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்தப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share

2 Comments

தொடர்புடையது
MediaFile 6 3
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

கல்முனையில் அதிர்ச்சி: 15 வயது பணிப்பெண் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில், வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 15 வயதுச்...

image 870x 6965aedee783e
செய்திகள்இலங்கை

பல மாகாணங்களில் மழை: சில இடங்களில் 50 மி.மீ பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்...

MediaFile 7 4
செய்திகள்உலகம்

உலகப் பொருளாதாரத்தில் புதிய வரலாறு: 5,000 டொலர்களைக் கடந்தது தங்கம்! வெள்ளி மற்றும் பெலேடியமும் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்டமான...

MediaFile 5 4
உலகம்செய்திகள்

அமெரிக்காவை உறைய வைத்த ஃபெர்ன் பனிப்புயல்: 12 பேர் உயிரிழப்பு; 13,000 விமானங்கள் ரத்து; அவசரநிலை பிரகடனம்!

அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான குளிர்காலப் புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் “ஃபெர்ன்” (Winter Storm Fern)...