photo 6
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்கள் தன்னெழுச்சியின் 19ஆவது நாள் இன்று!

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை இராஜிநாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட ஜனநாயக மாற்றங்களைக் கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்தின் 19 ஆவது நாள் இன்றாகும்.

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் கட்சி சார்பற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்படவில்லை.

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான வாயிலை மறித்து மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலைஞர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

கோட்டாகோகம என பெயரிடப்பட்டுள்ள பகுதியிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதனிடையே, மக்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையின் மற்றுமொரு கட்டத்தை அலரி மாளிகைக்கு முன்பாக ‘மைனாகோகம’ என்ற பெயரில் ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில், தாம் இராஜிநாமா செய்யப்போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச நேற்று அறிவித்திருந்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...